தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். படத்தின் சூட்டிங் தற்பொழுது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

நடிகர் அஜித்குமார் இயக்குனரிடம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விடாமுயற்சி படத்திற்கான ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இப்படத்திற்கான ஒரு பாடலை வெளிநாட்டில் சூட் செய்வதாக இருந்த நிலையில் அதனையும் அஜித்குமார் புறக்கணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் OTT உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. ஆகையால் தீபாவளிக்குள் படத்தை முடிக்க வேண்டும் இல்லையெனில் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என்றும் ஒப்பந்தம் இட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமாரின் குட் பேட் அக்லி என்ற படத்தினை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் அதற்கான ஆர்டிஸ்ட்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அஜித் குமார் இயக்குனரிடம் கூறியுள்ளார். எனவே ஆதிக் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்க இருந்த குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் வேலைகளை தற்போதே தொடங்கி விட்டார்.

ஆதிக் இப்படத்திற்கு இரண்டு நடிகர்களையும் தேர்வு செய்துள்ளார். மேலும் கேமராமேன் நட்டி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.தற்பொழுது இவர்கள் நடிக்கும் காட்சிகளை ஹைதராபாத்தில் சூட்டிங் செய்ய ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
