தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான வைகை செல்வன், முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்களான டி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று முறைப்படி தங்களை இணைத்துக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் நீண்ட காலமாக முக்கிய நிர்வாகிகளாகவும், வலுவான முகங்களாகவும் வலம் வந்த பலரும் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி தவெகவை நோக்கி நகர்வது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்கி வருகிறது.
