“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகத்தில் கையாசி பூசப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 30 வயதுப் பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சொத்து பிரச்சினை காரணமாக அவர் தனது மாமியார் வீட்டிற்கு உரிமை கேட்கச் சென்றபோது, அவரது கணவரின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டு, ஊர் முழுக்க அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.

   

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை அந்த கிராமத்தின் முன்னாள் வாட்ச்மேன் மற்றும் இந்த கொடூரத்தை வீடியோ எடுத்த நபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான சட்ட உதவி மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருவதோடு, மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.