ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிம்மாசலம் (25) என்பவருடைய மனைவி பவானி (19). இருவரும் கலந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் சிம்மாசலம் ஜகத் கிரி குட்டாவில் தங்கி இருந்து இரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் ஏறியுள்ளார்.
கணவன் மனைவி இருவரும் ரயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்த நிலையில் ரயில் புவனகிரி அடுத்த வங்கப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக கணவன் மனைவி இருவரும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
