இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய சவுகரியமான பயணத்திற்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயணிகளின் வசதிக்காக பல மாற்றங்களையும் செய்து வருகிறது. சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு உட்பட பல புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில திட்டங்களையும் பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக ரயில் பெட்டிகளில் பயணிகள் உடைய பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல முன்பதிவு உள்ள பெட்டிகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டத்தை ரயில்வே கொண்டு வரவுள்ளது. இந்த திட்டமானது தற்போது சோதனை அடிப்படையில் புது டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நீண்ட தூரம் ரயில்களில் இணைக்கப்பட்ட முன்பதிவு இல்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட் மட்டுமே வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால் தினமும் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவு இல்லா பட்டியலில் 300 முதல் 350 பேர் மூச்சு திணறல் ஏற்படும் விதமாக நெருங்கி அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார்கள். இதனால் பல இன்னல்களையும் சந்திக்கிறார்கள். எனவே பயணிகளுடைய வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…