நாடு முழுவதும் அமல்… ஆதார், பான், ரேஷன் கார்டில் முக்கிய மாற்றங்கள்… மக்களே மறக்காம இதை பண்ணி முடிச்சிடுங்க…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதால் இதனை அனைவரும் கவனிக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு டிசம்பர் 31ம் தான் கடைசி தேதி. அதற்குள் இணைக்கவில்லை என்றால் 2026 ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும். அப்படி நடந்தால் சம்பள ஒதுக்கீடு, வங்கிகளில் முதலீடு மற்றும் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல நிதி செயல்பாடுகள் தடை செய்யப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம் ஆதார் அட்டை வடிவத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. UIDAI பரிசீலனை செய்து வரும் திட்டத்தின் படி ஆதார் அட்டை புகைப்படம் + qr கோடு வடிவில் மட்டுமே வழங்கப்படும். அதாவது முகவரி போன்ற தகவல்கள் எதுவும் ஆதார் அட்டையில் இருக்காது.

   

அடுத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் மறு சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலகேடு டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களுடைய கைரேகையை பதிவு செய்து இ கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் தானியங்கி தணிக்கை தொடங்கப்பட்டு நகல் ரேஷன் கார்டுகள், தகுதியற்ற ரேஷன் காடுகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும். ஒரே குடும்பம் பல இடங்களில் சலுகை பெறுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதனை பொதுமக்கள் உடனடியாக முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.