BREAKING: புதிய பொறுப்புகள்… “29 பேர் கொண்ட மெகா படை”…. விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலங்கும் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தி புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் தலைவர் விஜய் நியமித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் மத்தியில் கட்சியின் கருத்துக்களை வலுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தித் தொடர்பு அணியில் மொத்தம் 29 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.