“இனி இஷ்டத்துக்கு ரேஷன் கார்டு தர முடியாது”… அதிகாரிகளுக்கு செக் வைத்த உணவுத்துறை…. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஷாக் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் தகுதியுள்ள நுகர்வோருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு போன்ற நலத்திட்டங்களை வழங்க ரேஷன் கார்டுகள் இன்றியமையாத ஆவணமாக விளங்குகின்றன. புதிய ரேஷன் கார்டு தேவைப்படுவோர் பொது விநியோக திட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிப்பதும், அதனை வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதும் நடைமுறையாக உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக 100 முதல் 200 விண்ணப்பங்கள் வரும் நிலையில், சில அதிகாரிகள் அரசியல் பின்னணி கொண்டவர்களின் சிபாரிசுகளுக்கும், லஞ்சத்திற்கும் ஆசைப்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து விரைவாக அங்கீகரிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய முறைகேடுகளுக்கும், தகுதி வாய்ந்த சாமானிய மக்களின் காத்திருப்பு காலத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் துறை தற்போது ஒரு புதிய தொழில்நுட்ப வசதியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் அவற்றின் பதிவு வரிசை எண்களின் (Priority Order) அடிப்படையிலேயே மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் அதிகாரிகள் தன்னிச்சையாக குறிப்பிட்ட சில விண்ணப்பங்களை மட்டும் முந்திச் சென்று அங்கீகரிக்க முடியாது என்பதால், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு தகுதியானவர்களுக்கு உரிய நேரத்தில், முறைகேடின்றி புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

32 seconds ago

ஏய் கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

2 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

4 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

8 minutes ago

அக்கா… பெட்ரோல் போடுங்க… கவனத்தை திசைதிருப்பி போனை அபேஸ் செய்த திருடர்கள்… சிசிடிவி காட்சிகளால் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

NR புரா காவல்துறை, சிக்கமகளூரு மாவட்டம் முத்தினக்கொப்பா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக…

10 minutes ago