திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அண்மையில் தவெக-விற்கு ஆதரவளித்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். “அண்ணாவும் ராஜாஜியும் இருந்த சட்டமன்றத்தில் நாதாரித் தலைவர்களெல்லாம் இன்று முதலமைச்சராக இருந்து கொண்டு, எங்கள் தலைவரை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீர்களா?” என்றும், திமுக கூட்டணி இல்லை எனச் சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த சர்ச்சைக்குரிய விமர்சனம் குறித்து தவெக அரசின் அமைச்சரான வன்னி அரசுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, “தேர்தல் தோல்வி ஏற்பட்டதில் இருந்தே ஆ.ராசா கடுமையான மன உளைச்சலில் ஏராளமான உளறல்களைச் செய்து வருகிறார்” என்று மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், திராவிடக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் மிகத் திடமாகப் பேசி வரும் இயக்கங்களான விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது ஆ.ராசா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். எங்களை அவதூறு செய்வதன் மூலம், திமுக என்ற பேரியக்கத்தை ஆ.ராசா பாஜகவின் பாதையிலோ அல்லது பாஜகவின் பக்கமோ இழுத்துச் செல்கிறாரோ என்ற பலத்த ஐயம் தங்களுக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…