அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்… செம குஷியில் இபிஎஸ்… உண்மையை உளறிய பிரபலம்..!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் விஜய்க்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் தமிழக அரசியல் கணக்குகளையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியின் சதியும் காவல்துறையின் அலட்சியமும் காரணம் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியும், விஜய் தாமதமாக வந்ததே சம்பவத்திற்கு காரணம் என்று திமுக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக நிற்கும் நிலையில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மத்தியில் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது விமர்சனம் வைப்பதை முற்றிலுமாக தவிர்த்து உள்ள இபிஎஸ் திமுக அரசின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று அழுத்தமாக கூறி வருகிறார்.

   

அதே சமயம் விஜய் பக்கம் பாஜகவும் நெருங்குகிறது. தங்களுக்கு ஆதரவாக நின்ற அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதற்கு அச்சாரம் போடும் விதமாக விஜயுடன் கூட்டணி என்பதை ஈபிஎஸ் சமீபத்தில் மறைமுகமாக பேசி இருந்தார். இருந்தாலும் இதில் விஜயின் முடிவு என்ன என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

   

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணியை அறிவிக்காத மேலும் சில கட்சிகள் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு வரும் என்ற ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 51% அதிகரித்துள்ளதாக திமுக அரசை விமர்சித்தார். மேலும் கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை CBI வசம் கொடுத்தால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்தார். அத்துடன் 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் தமாகா போட்டியிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.