தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றனர். அடுத்துதடுத்து பல சிறிய கட்சிகள் அதிமுக, திமுக விழா இணைந்து வருகின்றன. இதில், தவெக உடன் கூட்டணிக்கு தான் பெரிய கட்சிகள் இதுவரை இணையவில்லை. சீமானின் நாதக தனித்தே போட்டி என அறிவித்துவிட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஜனவரி மாதம் முதல் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவுள்ளன. அதிமுக-வுக்கு பல புதிய கட்சிகள் ஆதரவு தர உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
