100 நாள் வேலைத் திட்டம் காலி!.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய அதிரடி மாற்றம்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

By Muthu Mani on ஆனி 11, 2026

Spread the love

திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் புறக்கணித்து வந்தது. அதன்படி நீட் தேர்வு, மின்சார திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமில்லாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை ‘விபி ஜி ராம் ஜி’ என மாற்றி புதிய நிபந்தனைகளுடன் மத்திய அரசு கொண்டு வந்தது. பெயரையோ நிதிப் பகிர்வையோ மாற்றக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு வலியுறுத்தியிருந்தார். ஆனால், தமிழகத்தில் தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, நிதித் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு நிதியையும் மத்திய அரசே வழங்கி வந்த நிலையில், இனி மத்திய-மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதிப்பகிர்வு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடந்த ஊரக வேலைவாய்ப்பிற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் இத்திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் மத்திய அரசு ஒதுக்கியுள்ள 95 ஆயிரம் கோடி ரூபாயில், தமிழ்நாட்டிற்கு 7,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

   

கடந்த 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, 2025-26 இல் அதனை ₹7,585 கோடியாகக் குறைத்துள்ளது. மேலும், இந்த நிதியைப் பயன்படுத்த புதிய சட்டத்தின்படி மாநில அரசு தன் சொந்த நிதியிலிருந்து ₹5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையால், தமிழகத்திற்கு கூடுதலாக ₹4,000 கோடிக்கும் மேல் சுமை ஏறியுள்ளது. அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டின் நிதியைக் குறைத்துவிட்டு, மாநிலத்திடமே கூடுதல் பங்களிப்பு கேட்பது என்ன மாதிரியான கூட்டாட்சி தத்துவம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.