ALERT: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தை புரட்டி எடுக்க போகும் கனமழை… வந்தது அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 17, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 22ஆம் தேதி வங்கு கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.