NDA கூட்டணியில் அமமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு?… ஒரே போடாய் போட்ட டிடிவி தினகரன்…!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் இதுவரை கூட்டனை குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதனைப் போலவே பாமக, தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 முதல் 7 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதாக பரவிய தகவலை டிடிவி தினகரன் மறுத்துள்ளார். அமமுக இன்னும் கூட்டணி முடிவையே எடுக்கவில்லை என்றும் வேண்டுமென்றே சிலர் இந்த வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலிலேயே தங்களுக்கு ஆறு தொகுதிகள் வழங்கப்பட இருந்ததாகவும் நாங்கள் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.