மத்திய அரசின் பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி (NTPC) லிமிடெட், தனது நிதித் துறையில் (Finance) காலியாக உள்ள 25 நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டயக் கணக்காளர் (CA) அல்லது சிஎம்ஏ (CMA) தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 29 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27, 2026-க்குள் ஆன்லைன் வழியாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஊதியம், தேர்வு முறை மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள என்டிபிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தை (careers.ntpc.co.in) அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
