“தோள்பட்டை வலிக்கு மசாஜ் கேட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி”… தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய ஊழியர்… பகீர் சம்பவம்…!

By Nanthini on தை 23, 2026

Spread the love

மும்பை வடாளா பகுதியில் ஆன்லைன் மூலம் மசாஜ் சேவை பெற முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான அந்தப் பெண், நீண்ட நாட்களாக இருந்த தோள்பட்டை வலியைப் போக்க ‘அர்பன் கம்பெனி’ (Urban Company) செயலி மூலம் வீட்டிற்கே வந்து மசாஜ் செய்யும் சேவையை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், வழக்கமாக வர வேண்டிய ஊழியருக்குப் பதிலாக நீலம் குமாரி ஜெய்சவால் என்ற மாற்று ஊழியர் வந்ததும், அவர் கொண்டு வந்த உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததும் அந்தப் பெண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வசதிக் குறைபாடு காரணமாக மசாஜ் சேவையை அந்தப் பெண் ரத்து செய்ய முயன்றபோது, ஊழியர் நீலம் குமாரி கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஊழியர் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனைத் தடுக்க வந்த பெண்ணின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் தாக்கியதால் வீட்டில் பெரும் ரத்தக்களறி ஏற்பட்டுள்ளது.

   

இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் வடாளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அர்பன் கம்பெனி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியரைத் தனது சேவையிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளதோடு, காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. தோள்பட்டை வலியைப் போக்க முயன்ற பெண், தற்போது உடல் முழுவதும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.