இனி ஓவர் டைம் வேலை செய்தால் டபுள் சம்பளம்… அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள்… யார் யாருக்கு என்னென்ன பயன்?… இதோ விவரம்…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. தற்போது உள்ள பணி சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதிய சட்டம் (2019), தொழில் உறவுகள் சட்டம் (2020), சமூக பாதுகாப்பு சட்டம் (2020), பணியிட பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம் (2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சலுகைகள் (சமூக பாதுகாப்பு, சம்பளத்துடன் விடுப்பு, ஓராண்ட்டுக்குப் பிறகு graturity), Gig, platform பணியாளர்களுக்கு அங்கீகாரம். அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு. எந்த துறையாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம். அனைவருக்கும் இலவசமாக ஹெல்த் செக்கப். பாதுகாப்பு மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவு பணி செய்ய அனுமதி. ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்.

   

ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு. அனைத்து தொழிலாளர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வழங்குவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளில் பணி நேரம் 8 முதல் 12 மணி நேரம் வரை வாரத்திற்கு 48 மணி நேரம் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் நேரம் அதாவது ஓவர் டைம் வேலை செய்தால் இருமடங்கு சம்பளம். தேவையான சூழலில் தொழிலாளர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது கட்டாயம். ஊதியம் மற்றும் பணி நேரம் உள்ளிட்ட விதிகள் இனி டிஜிட்டல் மற்றும் ஊடக பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.