அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் 68 வயதான மேரிபெத் லூயிஸ். இவர் தன்னுடைய கணவருக்குத் தெரியாமல் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றதால் மொத்தம் 15 குழந்தைக்ளுக்கு தாயாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தை ஆசை காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளார.
அதன்படி கணவர் பாபின் பெயரில் போலி கையெழுத்திட்டு 2023 ஆம் வருடம் இரட்டை குழந்தைகளை பெற்றார். இது கணவருக்கு தெரியாமல் இருந்த நிலையில் ஒருநாள் தபாலில் பெற்றோர் சான்றிதழ் வந்தபோது இதை அறிந்த கணவர் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் குழந்தைக்கு தம்பதியே சட்டப்பூர்வ பெற்றோர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
