திடீர் திருப்பம்… டெல்லி பறக்கும் மாணிக்கம் தாகூர்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on தை 17, 2026

Spread the love

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரையில் இருந்து இன்று காலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இது குறித்து தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் பயணம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல என்றும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் பிரதிபலிப்பதற்காகவே டெல்லி செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்தித்து, தொண்டர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய பதிவில், மதவெறி கும்பலை வீழ்த்துவதோடு மட்டுமல்லாமல், அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டணியில் “நட்புக்குத் தோள் கொடுப்போம், அதே வேளையில் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உரிமைகளை மீண்டும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் நலன் கருதியே இந்த முக்கிய பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர் விளக்கியுள்ளார்.