“கொடுத்ததும் குற்றம்தான்!”… திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டு… மரியம் வில்சனுக்கு முதல்வர் வைத்த ஆப்பு… அமைச்சர் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை… அதிர்ந்த கோட்டை வட்டாரம்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

தமிழக நிதியமைச்சர் மரியம் வில்சன், முந்தைய திமுக ஆட்சியின் போது தனது கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகச் சட்டப்பேரவையில் வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வைத்து இதற்கான பணத்தை வழங்கியதாகக் கூறிய அவர், தான் கொடுத்ததற்குத் தானே சாட்சி என்றும், இது தொடர்பான எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் அவதூறு வழக்குகளையும் சந்திக்கத் தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சைக் கேட்ட முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். லஞ்சம் பெறுவது மட்டுமின்றி அதனைக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமே என்பதால், எதிர்க்கட்சியான திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தால் அது அரசுக்கும் முதலமைச்சருக்கும் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர்கள் கருதினர். தங்களது இந்த ஆதங்கத்தையும் வரவிருக்கும் அரசியல் சிக்கல்களையும் முதல்வரின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியிடம் அவர்கள் உடனடியாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

   

அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர், அமைச்சர் மரியம் வில்சனைக் கடுமையாக எச்சரிக்குமாறு தனது தனிச் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதன்படி ஜெகதீஷ் பழனிசாமி அளித்த கடுமையான அறிவுறுத்தல்களால் மனமுடைந்த அமைச்சர், தற்பொழுது வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.