“00:00 ரகசியம் என்ன தெரியுமா…?! விஜய் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த ‘புதிய தொடக்கம்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!”

By Swetha on ஆனி 25, 2026

Spread the love

விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவைச் சுற்றி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. விஜயின் குடும்ப வாழ்க்கை, குறிப்பாக அவரது மனைவி சங்கீதாவுடனான விவாகரத்துச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, த்ரிஷாவுடனான உறவு குறித்து இணையத்தில் பலவாறாகப் பேசப்பட்டது. இந்தச் சூழலில், இருவரும் ஒரே நிற ஆடையில் ஒரு தனியார் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள், அஜித்தின் தாயார் மறைவுக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்தச் சென்றது மற்றும் விஜயின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா பங்கேற்றது போன்ற நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தின.

சமீபத்தில் விஜயின் 52-ஆவது பிறந்தநாளை நடிகை த்ரிஷா கேக் வெட்டி கொண்டாடியதோடு, அதுகுறித்த புகைப்படங்களையும் “கில்லி” திரைப்படப் பாடலை பின்னணியாகக் கொண்டு தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சிறப்புப் பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் ஒரு சாதாரண நட்பின் வெளிப்பாடாகக் கருதினாலும், மற்றொரு தரப்பினர் இதனைப் பழைய சர்ச்சைகளுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

   

த்ரிஷா தனது பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில் “00:00” என்ற எண்ணைக் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆன்மீகம் மற்றும் ஈர்ப்பு விதி நம்பிக்கைகளின்படி, “00:00” என்பது ஒரு “Angel Number” ஆகக் கருதப்படுகிறது. இது ஒரு புதிய தொடக்கம், பழைய கவலைகளின் முடிவு மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழப்போவதைக் குறிக்கும் என்பதால், த்ரிஷா தனது புதிய வாழ்க்கைக்கான தொடக்கத்தையே இதன் மூலம் குறிப்பிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.