24 மணி நேரத்திற்குள் FIR போடாவிட்டால்… தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்… CM விஜய்க்கு திமுக எச்சரிக்கை..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

தவெக கட்சியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதற்காக, திமுகவின் ‘Gen Z’ அமைப்பைச் சேர்ந்த கனீஷ் மற்றும் மற்றொரு இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய வேண்டும் என அரசுக்குக் கெடு விதித்துள்ளார். தவறும்பட்சத்தில் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுக ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால் விஜய் அரசியலை விட்டே ஓடியிருப்பார் என்றும், லேசாக விட்டதாலேயே இன்று அவர் ஆட்டம் போடுகிறார் என்றும் விமர்சித்துள்ளார். தவறான பிரச்சாரங்களை இளம் பிஞ்சு உள்ளங்களில் விதைத்து விஜய் ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவிற்கு துணை போகும் காவல்துறையை எதிர்கொள்ள திமுகவிடம் வலுவான சட்டத்துறை அணி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

   

மக்களின் உண்மையான பிரச்சனைகளில் அக்கறை காட்டாமல், தவெகவினர் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக இளைஞர்கள் மீது கடும் தாக்குதலை நடத்துவதாக ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார். மேலும், திமுகவினர் ஒருவரைக் கைது செய்தால் அதே பதிவோடு ஒரு லட்சம் பேர் திரள்வோம் எனக் குறிப்பிட்ட அவர், தவெகவின் 40 நாள் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைப் பிரச்சினைகள் நிலவுவதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.