BREAKING: புதிய ஆடியோ கசிந்தது.. பாமக கோட்டையில் வெடித்த புதிய சர்ச்சை…. ரகசிய டீல் அம்பலம்…!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு, வரவிருக்கும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சீட் தருவதாக அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர் கணேஷ்குமார் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ கசிந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில், முகுந்தனை ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்வதாகவும், அதற்கான முழுத் தேர்தல் செலவுகளையும் அன்புமணியே ஏற்றுக் கொள்வார் என்றும் கணேஷ்குமார் உறுதியளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கட்சிப் பதவிகள் வழங்குவது குறித்துப் பின்னர் ஆலோசிக்கலாம் என அவர் குறிப்பிடும் அந்த ஆடியோ, வாரிசு அரசியல் சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ரகசியமாகப் பேசப்பட்ட இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதோடு, பாமக உட்கட்சி அரசியலிலும் மற்ற கட்சியினரிடையேயும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.