தமிழகத்தில் பொங்கல் பரிசு…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு…!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 8-ம் தேதி முதல் இன்று வரை, மாநிலம் முழுவதும் சுமார் 2,04,10,899 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ₹6,123.26 கோடி ரொக்கத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணத்தைப் பெறாத மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, நாளை (ஜனவரி 13) அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்குரிய பொங்கல் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.