குழந்தைகள் தான் நம் வீட்டின் கண்கள். குழந்தைகளை நல்லமுறையில் ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகள் சிறு வயதில் இருந்தே சத்தான உணவுகளை சாப்பிடும் பொழுது தான் அவர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தேவையில்லாத உடலுக்கு கெடுதல் தரக்கூடிய உணவுகளை அவர்கள் சாப்பிடும் போது வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் உடல் உறுப்புகள் ஆனது ஊட்டச்சத்து கிடைக்காமல் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். ஒரு சில கெடுதல் தரக்கூடிய உணவுகளை நீண்ட காலத்துக்கு சாப்பிடும் போது குழந்தைகளுக்கு உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அப்படி எந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே கூடாது என்பதை பற்றி இனி காண்போம்.
முதலாவதாக குழந்தைகள் பிஸ்கட்டுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இதில் கார்போஹைட், சர்க்கரை மற்றும் மைதா அதிக அளவில் சேர்த்திருப்பதால் அது உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். பிஸ்கட் குழந்தைகளுக்கு நல்லது என்ற ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் அதிகப்படியாக குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடும்போது அவர்களுக்கு பசி உணர்வே போய்விடும்.
அடுத்ததாக குளிரூட்டப்பட்ட செயற்கை கார்பனேட்டட் பானங்கள். அதிகளவு சர்க்கரை மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருக்கும் பானங்களை குழந்தைகள் குடிக்கவே கூடாது. இது உடல் நலத்தை சேதப்படுத்துவதோடு பற்களை சேதப்படுத்தும். எலும்புகளை பலவீனமாக்கும் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும்.
அடுத்ததாக அளவிற்கு அதிகமாக இனிப்புகள் சேர்க்கப்பட்ட சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இது அவர்கள் பற்களை கெடுத்து விடும். அதிக இனிப்புகளை சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் மற்றும் நீரழிவு நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது.
அடுத்ததாக குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பர்கர்கள், பீசா, நூடுல்ஸ், கொழுப்புகள் நிறைந்த உணவுகளை கொடுக்கவே கூடாது. தற்போதைய காலகட்டத்தில் பிரெஞ்ச் ப்ரைசும் குழந்தைகளுக்கு பெற்றோர்களே வாங்கி தருகிறார்கள். இது நிச்சயமாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய உணவுகள் தான். இது போன்ற உணவுப்பொருட்களை உங்கள் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடனே நிறுத்துங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஏற்படுத்தி விட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் முழுமையான வளர்ச்சியுடனும் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.