பிக் பாஸ் சீசன் ஆனது அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கியது. இதில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியளர்களாக உள்ளே வந்தனர் . தற்போது வீட்டில் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் ராயன் டிக்கெட்டு ஃபினாலே டிக்கெட் கைப்பற்றி நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார். இந்த சீசனில் டைட்டில் வின்னராக யார் என்று எதிர்பார்ப்பு இழந்துள்ளது. இதனையடுத்து பிக்பாஸில் இருந்து வெளியே சென்ற முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் விஷால் டபுள் கேம் ஆடுகிறார் என்றும், அன்ஷிதா மற்றும் தர்ஷிகாவிடம் காதல் விளையாட்டு விளையாடி அவர்களை வெளியே அனுப்பி விட்டார் என்றும் உள்ளே சென்ற போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக சாச்சனா விஷாலை பிளே பாய் என்று கூறியதால் அவர் இரவு முழுவதும் கதறி அழுது கொண்டிருந்தார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் இணைந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்கள்.
அப்போது, தொகுப்பாளர், vj விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அன்று இரவு விஷாளுடைய காதில் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு, அன்ஷிதா நான் யாரையாவது காதலிக்கிறேன் என்றால், காதில் ரகசியமாக சொல்ல மாட்டேன், சத்தமாகவே சொல்லியிருப்பேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறியுள்ளார்.
ஆனால் அப்படியும் விடாத தொகுப்பாளர், விஷாலின் காதில் அர்னவின் பெயரை சொன்னீங்களா? என்று கேட்க, விஷாலும் இல்ல அர்னவும் இல்ல. நான் என்னுடைய எக்ஸ் காதலன் பெயரை சொன்னேன் என்று கூறியிருந்தார்.