நம் நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில் தான் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்ற முறையில் தான் அவர்கள் நாளைக்கு சமூகத்தில் ஒரு பொறுப்புள்ளவராக நல்ல மனிதராக வர முடியும். அன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பங்கள் இருந்தது. அப்போது பெரியவர்கள் அரவணைப்பில் தாத்தா பாட்டி மாமா அத்தை அனைவரின் கவனிப்பிலும் குழந்தைகள் வளர்ந்தது. இப்போது தானி குடித்தனம் என்று மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இருக்கிறார்கள். இதில் பல சிக்கல்களை குழந்தைகள் சந்திக்கிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.
இப்போது எல்லோரும் தனி குடும்பமாக தான் வாழ்கிறார்கள். அதுவும் ஒரு குழந்தை தான் அதிகமாக இருக்கிறார்கள். இரண்டு குழந்தை என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அம்மா அப்பா இருவரும் சண்டை இட்டுக் கொண்டால் அதை பார்க்கும் குழந்தைகளின் மனநலன் வெகுவாக பாதிக்கப்படும். பிள்ளைகள் முன்பாக பெற்றோர்கள் சண்டையிட்டு கொள்ளவே கூடாது. குழந்தைகள் எப்போதுமே பெற்றோரை தான் பின்பற்றுவார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் நடத்தையை வீட்டில் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள் நெறிமுறைகளை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.
குழந்தைகளின் நம்பிக்கையை தன்னம்பிக்கையை மரியாதை என அனைத்து விஷயங்களிலும் கவனம் எடுத்து அவர்களை வழிநடத்த வேண்டும். குழந்தைகள் முன்னால் கெட்ட வார்த்தை பேசுவது பொய் கூறுவது மற்றவர்களை பற்றி இழிவாக விமர்சிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. ஏனென்றால் குழந்தைகள் நல்ல ஒரு கவனிப்பாளர்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் அப்படியே பதிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எப்போதுமே நம்முடைய குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஒரு பாசிட்டிவான எண்ணங்களை வளர்க்க வேண்டும். பிரச்சனைகளை பாசிட்டிவாக அணுகுவதை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைவரையும் மரியாதையாக நடத்தும் படி தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக பெற்றோர்கள் தங்களது இஷ்டம் போல் சண்டையிட்டுக் கொள்வது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது அவர்களது மனநலன் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.