BiggBoss வீட்டில் மகனின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அப்பா-அம்மா… சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த போட்டியாளர்..!

By Soundarya on மார்கழி 26, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

   

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கல் மட்டுமே உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

   

#image_title

 

இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் முதன்முதலாக தீபக்கின் மனைவி மற்றும் மகன் உள்ளே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அடுத்தடுத்து ஒவ்வொருவருடைய குடும்பத்தாரும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது அருணின் அப்பா, அம்மா வந்துள்ளார்கள். அவர்களிடம் அருணின் காதல் குறித்து போட்டியாளர்கள் கேட்க அதற்கு அவர் வரவில்லை. அருண் எதை தேர்வு செய்தாலும் சரியாக தான் தேர்வு செய்வார். எப்போதுமே அவங்க காதலுக்கு கிரீன் சிக்னல் தான் கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். இதனால் அர்ச்சனா-அருண் காதல் உறுதியாகியுள்ளது.