பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று புற்றுநோயின் காரணமாக காலமானார். கடந்த ஆறு காலம் ஆறு மாதமாக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நோயின் தாக்கம் கல்லீரலையும் பாதித்திருக்கும் என்பதால் சில நாட்களாக ஐசுவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அகால மரணம் அடைந்தா.ர் இவருடைய மகள்கள் இருவரும் சீரியலில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகள் அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இளைய மகள் அஞ்சனா திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவிதான் சீரியல் நடிகை தீபா. சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார் . இவர் 17 வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்து அதன் பிறகு ஜெயா டிவியில் ஒளிபரப்பான அலைபாயுதே சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நேத்ரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு மீண்டும் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையின் கேரக்டரில் கவின் நடித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு அம்மாவாக நடித்தவர் தான் இவர். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களிலும் நடித்தார். தொடர்ந்து சின்ன திரையில் மாமியார் கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் . சிங்க பெண்ணே சீரியல் தான் முதன் முதலில் இவரை நெகட்டிவ் ரோலில் காட்டியுள்ளது. சீரியல்கள் மட்டுமில்லாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார் தீபா நேத்ரன்.
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…