கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் 12 வயது மகன் சஞ்சய், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், டியூஷனுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் சிறுவன் லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனால் சிறுவன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் ஆபத்தில் சிக்கினாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில், மாயமான சிறுவன் சென்னையில் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது காவல்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். விசாரணையில், வீட்டில் பெற்றோரிடம் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் கோபம் காரணமாகவே சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவலறிந்து பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…
கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…
சிங்கப்பூரில் காதலி தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி, 40 வயது நபர் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் காதலியின் அந்தரங்க வீடியோ…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…