லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது.

வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர். படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர். சில நெட்டிசன்கள் காப்பி அடிப்பதில் லோகேஷ் அட்லீயையே மிஞ்சி விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது லியோ படத்தின் ட்ரெய் லரை பார்க்கும்போது கதை கடந்த 1998-ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான அபரன், கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஹாலிவுட் படம் ஆகிய இரண்டையும் காப்பி செய்து லோகேஷ் லியோ படத்தை எடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் படத்தை முழுவதுமாக பார்த்து எதையும் சொல்ல வேண்டும். முன்கூட்டியே முடிவு எடுக்கக் கூடாது என பதில் அளித்து வருகின்றனர்.
