சினிமா பத்திரிகையாளர்களான ‘வலைப்பேச்சு’ குழுவினரை (பிஸ்மி, அந்தணன், சக்திவேல்) நடிகை நயன்தாரா நேரில் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், தங்களைப் பற்றி அவதூறு பரப்பி பணம் சம்பாதிப்பதாக இந்த மூவரையும் “மூன்று குரங்குகளுக்கு நேர் எதிரானவர்கள்” என நயன்தாரா கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போது துபாயில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் அதே நபர்களை நயன்தாரா இன்முகத்துடன் சந்தித்துப் பேசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “அன்று அப்படி பேசிவிட்டு, இன்று இப்படி நேரில் சந்திக்கிறாரே” என நெட்டிசன்கள் “அது வேற வாய், இது வேற வாய்” என்ற ரீதியில் நயன்தாராவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்
