தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் தற்போதைய பதவிக்காலத்திற்கான கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நாளை முதல் அவையில் வழக்கமான அலுவல் பணிகள் மற்றும் கேள்வி-பதில் நேரங்கள் நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் தமிழக மக்களுக்குப் பயன் தரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே இதற்கான வாக்குறுதிகளை முதலமைச்சர் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகப் பெண்களுக்கு மிக விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
