நயன்தாராவை தொடர்ந்து பெரிய தொகைக்காக நெட்ஃபிளிக்ஸிடம் சிக்கிய பிரபல ஜோடி.. அதுவும் இரண்டாவது திருமணமாம்..!

By Nanthini on கார்த்திகை 26, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. சமந்தாவுடன் பிரிவுக்குப் பிறகு நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் இல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இவர்கள் இருவருமே இது குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் திருமணத்தை அறிவித்தனர்.

Naga Chaitanya Engagement : நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா  துலிபாலாவின் நிச்சயதார்த்தம்! - வெளியான க்யூட் புகைப்படங்கள் – News18 தமிழ்

   

கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள நடந்து முடிந்தது. அதனை நாகசைதன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா சமூக வலைத்தளம் மூலமாக அறிவித்திருந்தார். நிச்சயதார்த்தத்தின் அழகான புகைப்படங்களும் வைரலானது. இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

   

Album - நாகசைதன்யா - சோபிதா திருமண நிச்சயதார்த்தம் | புகைப்படத் தொகுப்பு |  Naga Chaitanya Sobhita Dhulipala Engagment Album

 

இவர்களுடைய திருமண அழைப்பிதழ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. தன்னுடைய தாத்தாவின் சிலையின் முன்பு தங்களுடைய திருமணத்தை நடத்த விரும்புவதாக நாகசைதன்யா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் வகையில் நட்சத்திர ஹோட்டலில் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண கொண்டாட்டத்தை நெட்பிலிக்ஸ் தன்னுடைய ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைரலாகும் நாகசைதன்யா- சோபிதா திருமண பத்திரிக்கை?!… இது உண்மைதானா!…  ரசிகர்கள் குழப்பம்..! - CineReporters

இதற்கு முன்னதாக தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமணத்தையும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தையும் netflix நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவனுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 30 கோடி கொடுத்ததாக கூறப்பட்டது. மிகப்பெரிய சர்ச்சைக்கு நடுவே வெளியான இவர்களின் திருமண ஆவணப்படம் அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

நெட்ஃபிளிக்ஸ் முதல் அமேசான் பிரைம் வரை - Free OTT கிடைக்கும் மொபைல் ரீசாஜ்  பற்றி தெரியுமா?

இந்த நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணத்தை வாங்கியுள்ள நெட்ஃபிக்ஸ் அதற்காக 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு உருவாக்கியுள்ளது இவர்களுடைய திருமணம். இந்த திருமணத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளதால் நெட்பிளிக்ஸ் இதனை ஒளிபரப்பு அதன் மூலம் அதிக வசூலை பெற முடியும் என திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாகவே 50 கோடி ரூபாய் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.