இப்படியொரு மனுஷனா..? திருமணமாகி ஆறு மாதங்கள் கழித்து… மனைவியை அவர் காதலனுக்கு கட்டிவைத்த சந்திரபாபு…!

By Soundarya on கார்த்திகை 26, 2024

Spread the love

சந்திரபாபு தமிழ் சினிமாவில் பணியாற்றிய தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மற்றும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர். சந்திரபாபு தூத்துக்குடியில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஜோசப் பிச்சை என்பதாகும். இவரை பாபு என்று செல்லமாக அழைப்பர். இவர் சந்திரகுல வம்சத்தில் பிறந்த காரணத்தினால் தமது பெயரை பின்னால் சந்திரபாபு என மாற்றி வைத்துக் கொண்டார். சந்திரபாபுவின் தந்தை ஜே பி ரோட்டரிஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். 1947 ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சந்திரபாபு.

திருமணமான அன்றே மனைவியை காதலருடன் அனுப்பி வைத்த சந்திரபாபு?

   

தனது தனித்துவமான நடனம், பாடல் மற்றும் நகைச்சுவையினாலே விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950 ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார் சந்திரபாபு. தனது நடிப்பிற்காகவும் நடனத்திற்காகவும் பாடும் திறமைக்காகவும் பிரத்தியேகமாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் சந்திரபாபு. நகைச்சுவை நடிகர் ஆன சந்திரபாபுவின் தொழில் வாழ்க்கை உச்சத்தில் இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

   

தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த  சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?

 

அவர் திருமணம் செய்த பெண் சந்திரபாபு அவருடைய முதலிரவன்று அவர்மனைவி  வேறொருவரை விரும்புவதாக கூறியதால் அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவரது காதலனுடன் சேர்த்து வைத்தாராம் சந்திரபாபு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சோகக்கதையை அடிப்படையாக கொண்டு தான் அந்த ஏழு நாட்கள் படம் எடுக்கப்பட்டதாக முன்னதாக பாக்கியராஜ் கூறியிருந்தார். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்றால், சந்திரபாபு ஷீலா என்ற பெண்ணை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான அன்றே மனைவியை காதலருடன் அனுப்பி வைத்த சந்திரபாபு?

பின் இருவரும் ஆறு மாதம் சென்னையில் குடும்பம் நடத்தினார்கள். சந்திரபாபு சில மாதங்களுக்கு பின்பே புரிந்து கொண்டார் தன் மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்பதை. அது குறித்து அவரிடம் கேட்டதற்கு தான் ஒருவரை காதலித்ததாகவும், அவரை மறக்க முடியவில்லை என்றும் கண்ணீர் விட்டுள்ளார். அதனால் அவர் காதலித்தவரிடமே சென்று விட்டு விட்டாராம். மேலும் இரண்டு பெரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்  ஏன்னு சொல்லிவிட்டு வாழ்த்தி வந்தாராம். அதன் பின் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த சந்திரபாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் என்பது குறிப்பிடத்தக்கது.