“100 பேர் மாயம்.. நள்ளிரவில் பறந்த உத்தரவு”…. நேபாள பேரிடரில் அதிர்ச்சி தகவல் கொடுத்த அமைச்சர்…!

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 700 பேர் உயிரிழந்த நிலையில், 2,500 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்று மீட்புப் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்து வருகிறது. சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், சட்டமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, டெல்லி தமிழக இல்லத்தில் சிறப்புப் போர் அறை அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக நேபாளம் சென்ற 319 பேரில், 219 பேர் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நள்ளிரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக காத்மண்டுவிலிருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 21 பேருக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டு, பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, கும்பகோணத்தைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 36 பேரைக் கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் பல்வேறு பயணக் குழுக்கள் வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் விவரங்களை வெளியிட்ட அமைச்சர், ஐடியல் டூர்ஸ் மூலம் சென்ற 39 பேரும், ஆத்ம யோக மையத்தைச் சேர்ந்த 150 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் கோவை மற்றும் சென்னைக்கு விமானங்கள் மூலம் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதேவேளையில், மகாதேவி யாத்ரா மூலம் சென்ற 49 பேர் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பதிவான பட்டியலில் உள்ள 15 பேர் என மொத்தம் 100 தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் மாயமாகியுள்ளது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் அவர்களின் உடைமைகள் கண்டெடுக்கப்படுவதால் மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்திய-நேபாள நாடுகளின் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான தமிழர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் டெல்லி பிரதிநிதி வெங்கட நாராயணன் ஆகியோர் டெல்லியிலேயே தங்கி மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை அரசு உணர்ந்துள்ளது; நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அனைவரையும் பாதுகாப்பாக மீட்க நம்பிக்கையுடன் தொடர்ந்து முயல்வோம்” என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

5 மணத்தியாலங்கள் ago