தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். முதலில் விஜய் டிவியில் நெல்சன் வேலை பார்த்துள்ளார். முதன் முதலில் சிம்பு ஹன்சிகாவை வைத்து நெல்சன் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை தொடங்கினார ஒரு சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.

அதன் பிறகு விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டாக்டர் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து விஜய் வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் நெல்சன் ட்ரோல் மெட்டீரியலாக மாறினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. உலகம் முழுவதும் சுமார் 700 கோடி வரை வசூல் செய்து ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பலரும் அறியாத சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியை நெல்சன் தான் இயக்கியுள்ளாராம். அதுதான் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குவதற்கு பல ஹிந்தி டைரக்டர்களை அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் பட்ஜெட்டுக்கு மீறி அதிக சம்பளம் கேட்டுள்ளனர். அப்போது நெல்சன் தானாக முன்வந்து கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை இயக்கி வெற்றி பெறுவேன் என தன்னம்பிக்கையுடன் கூறினாராம். அவர் கூறியபடியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஹிட் ஆனது.

