பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தியன் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை உலகநாயகன் கமலஹாசனை வைத்து எடுத்தார் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல சிக்கல்களை தாண்டி ரிலீஸ் ஆனது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என யோசித்து லைக்கா நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படத்தை 125 கோடி ரூபாய்க்கு ஓடிடி தளத்தில் விற்பனை செய்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனால் திரையரங்குக்கு இந்தியன் 3 திரைப்படம் வருமா என்பது தெரியவில்லை. ஓடிடி தளத்தில் விற்பனை செய்தால் இந்தியன் 3 திரைப்படம் திரையரங்குக்கு வராது. ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை விட இந்தியன் 3 திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என பட குழுவினர் கூறினார்கள். இதனால் ஒரேடியாக படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.