கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு (Admit Card) விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
