“என்னை காப்பாத்துங்க.. தப்பு பண்ணிட்டேன்” தோழியிடம் ரூ.100 கடன் வாங்கி விஷம் வாங்கிய நீட் மாணவி… உயிருக்குப் போராடும்போது மன்னிப்பு கேட்டு கதறிய சோகம்..!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் நீட் பயிற்சிக்காக கோட்டாவுக்கு வந்துள்ளார். பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு, தனது தோழியிடம் 100 ரூபாய் கடன் வாங்கி விஷம் அருந்திய நிலையில், சிறிது நேரத்தில் அதன் வீரியம் தாங்க முடியாமல் “தவறு செய்துவிட்டேன், என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உரிமையாளரும் சக மாணவர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தாதாபரி காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் கோட்டா விரைந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், கோட்டாவில் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருவது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. மாணவியின் குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் நிலைய அதிகாரி பல்தேவ் ராம் தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

4 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago