“வன்னியர் + தலித் + தேவர் + நாடார்”…. தமிழகத்தில் பாஜக நடத்தும் சாதி ரீதியான ஆடுபுலி ஆட்டம்… டெல்லியில் இருந்து வந்த ‘மெகா ஸ்கெட்ச்’….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பீகாரில் வெற்றி கண்ட அதே தேர்தல் வியூகத்தை (Bihar Model) தமிழகத்தில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் ஒட்டுமொத்தமாகப் பெற்று, திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே இந்த ‘மெகா பிளான்’-ன் முக்கிய நோக்கமாகும்.

பாஜகவின் இந்த வியூகத்தின்படி, கொங்கு மண்டலத்தின் பலமான கவுண்டர் சமூக வாக்குகளை எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மூலமாகவும், வடமாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகளைப் பாமகவின் அன்புமணி ராமதாஸ் மூலமாகவும் ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பெற டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

தலித் சமூக வாக்குகளைப் பொறுத்தவரை, ஜான் பாண்டியன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை உறுதி செய்ய பாஜக முயல்கிறது. மேலும், நாடார் சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்க பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சரத்குமார் போன்ற தலைவர்களை முன்னிறுத்தி தென்மாவட்டங்களில் பலமான அடித்தளத்தை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில், பல்வேறு சாதிப் பின்புலம் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்ததன் மூலம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோன்றதொரு வெற்றியைத் தமிழகத்திலும் அறுவடை செய்ய, சாதி ரீதியான வாக்கு வங்கிகளைக் கணக்கிட்டு தலைவர்களை ஓரணியில் திரட்டும் இந்த ‘பீகார் பாணி’ வியூகம் அதிமுக கூட்டணிக்கு கைகொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

5 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

11 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

24 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

34 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

40 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

46 minutes ago