கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனிடையே இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்று ஒரு பக்கம் ஆலோசித்து வரும் விஜய் மறுபக்கம் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகின்றார்.
இப்படியான நிலையில் கரூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் 41 பேர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஜய் கரூர் செல்லாமல் இருந்திருக்கலாம். அவரையும் அடித்து கொலை செய்யக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதியே அவர் காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளார். விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. 41 பேரை அடித்துக் கொன்றது போல அவரையும் அடித்து கொல்ல மாட்டார்கள் என்பதை என்ன நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது
