அப்படி போடு…..விரைவில் வெளியிடப்படும் நயன்தாரா திருமண வீடியோ…. திருமண டீசரை வெளியிட்ட netflix நிறுவனம்….. வைரலாகும் டீஸர் உள்ளே…

By Begam on புரட்டாதி 24, 2022

Spread the love

நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னையில்  மாமல்லபுரத்தில் உள்ள பிரம்மாண்ட ஹோட்டலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரையுலக சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

   

திருமணத்திற்காக ஹோட்டல் முழுவதும் ஒரு வாரம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் மொத்த உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது.

   

தற்பொழுது நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை netflix மிக விரைவில் வெளியிட உள்ளது அதற்கான டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. நடிகை நயன்தாராவின் திருமணத்துக்கான மொத்த செலவையும் netflix நிறுவனமே ஏற்றுக் கொண்டது.

 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்தை ‘Nayanthara Beyond the Fairy tale’ எனும் தலைப்பில் netflix நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விரைவில் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ வெளியிடப்படும் என்பதை netflix நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதோ அந்த டீஸர்  வீடியோ உங்களுக்காக…..