பிரபல மலையாள ஹீரோவுடன் ஜோடி சேரும் நயன்.. அட கடவுளே, ஏற்கனவே மண்ண கவ்வுனது பத்தலயா?

By admin on சித்திரை 14, 2024

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

   

அதன் பிறகு நயன்தாரா நடித்த படங்கள் மக்களிடையே சரியாக வரவேற்பை வரவில்லை. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிப்பில் உருவாகும் டியர் ஸ்டுடென்ட்ஸ் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

   

 

இந்த படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்திப் குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர். ஏற்கனவே நிவின் பாலியும் நயன்தாராவும் இணைந்து லவ் ஆக்சன் டிராமா என்ற திரைப்படத்தில் நடித்தனர். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அப்படி இருக்க மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப் போவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். படக் குழு பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து கிராபிக்ஸ் காட்சிகளில் நயன்தாரா புகைப்படத்துடன் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor)