தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் தாறுமாறான வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சினிமாவில் மட்டுமல்ல தற்பொழுது அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டு அதனை உறுதி செய்தார்.
2026 ல் நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ள அவர், அதற்குள் தான் கமிட் செய்துள்ள படங்களை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது அவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் GOAT திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று GOAT படத்தின் first single 6 மணிக்கு ரிலீசாகும் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ GOAT படத்தின் first single ….