வெளிநாட்டில் ஜாலியாக குழந்தைகளோடு Chill செய்யும் நயன்-விக்கி… வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்..!

By Soundarya on மார்கழி 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். எல்லா பெண்களையும் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நயன்தாரா.

   

எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தவர் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும்.

   

 

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்து வந்தார் நயன்தாரா.

அதற்கு அடுத்ததாக சில மலையாளத் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் நயன்தாரா.

2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான மசிக்கரே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் அதே நேரத்தில் ஐயா மற்றும் சந்திரமுகி இரண்டு படங்களிலும் நடித்து அறிமுகமானார்.

ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்க கூடியவராகவும் ஹீரோவே இல்லாத ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து புகழ் பெற்றதாலும் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.

இவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் இல்லாமல் பல பிசினஸ்களில் கவனம் செலுத்தி முதலீடு செய்து வருகின்றனர்.

இவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.

ஒருபக்கம் பிசினஸ், விளம்பர படங்கள் என பிசியாக இருந்தாலும் மறுபக்கம் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளோடு ஊர் சுற்றி வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது நயன்தாரா குடும்பத்துடன் பாரிஸ் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்டுக்களை அள்ளக் குவித்து வருகின்றனர்.