தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் மகிழ்ச்சியான இயக்கத்தில் விடாமுயற்சி படம் வருகிற 2025 ஆம் வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா தான் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செல்லவி தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி சூட்டிங் முடிந்த கையோடு அஜித் அங்கு நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனோஸ்க்கா உடன் கலந்து கொண்டார். குடும்பத்தோடு மேடையேறி மணமக்களை வாழ்த்தி அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் ஃபேமிலியோடு வந்து பிவி சிந்துவின் திருமண வரவேற்பு கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கோட் சூட்டில் அஜித் ஜேம்ஸ் பாண்ட் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள் . .இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது