Nayanthara

திருடப்பட்ட கத்தி படத்தின் கதை, விரக்தியில் தவித்த கோபி நயினார் – ரூ. 1 கோடி கொடுத்து படம் பண்ண சொன்ன நயன்தாரா

By admin on மார்கழி 4, 2023

Spread the love

இயக்குநர் கோபி நயனார், அறம் என்ற சிறந்த படத்தை இயக்கி, ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். இப்போது காலணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கிய கேரக்டரில் ராதிகா சரத்குமார், ரோகிணி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் செய்யாறு பாலு கூறியதாவது, கோபி நயினார், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர். அதனால் அவரை மீஞ்சூர் கோபி என்றுதான் ஆரம்பத்தில் அழைப்பார்கள். ஏஆர் முருகதாஸிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக அவர் இருந்தார். அப்போது அவரிடம் இருந்த கதை சொல்லும் திறமையை ஏஆர் முருகதாஸ் தெரிந்துக்கொண்டார்.

Nayanthara

   

காலையில் 4 இட்லி, மதியம் தக்காளி சாதம் அல்லது புளிசாதம், இரவு மீஞ்சூர் செல்ல பஸ் கட்டணம் மட்டுமே, கோபி நயினாருக்கு ஏஆர் முருகதாஸ் தருவது வழக்கம். ஒருமுறை அஜீத்குமாருக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று அவர் சொல்ல, கோபி நயினாரும் கதையை சொல்லி இருக்கிறார். அதன்பின், அவரை அவாய்டு செய்த முருகதாஸ், நீங்க போயிடுங்க என அனுப்பி விட்டார். பின்னர் கத்தி படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. அந்த டிரெய்லரை பார்த்த போது, அது ஏஆர் முருகதாஸிடம் நாம் சொன்ன நம்முடைய கதைதான் என கோபி நயினாருக்கு தெரிய வருகிறது. இதுகுறித்து புகார் கொடுத்து, பிரச்னை செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போகிறது.

   

Nayanthara

 

இந்நிலையில், நடிகை நயன்தாரா கோபி நயினாரை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கிறார். நான் கால்ஷீட் தருகிறேன். என்னை வைத்து படம் எடுங்கள் என கேட்டுக்கொள்கிறார். அதன்பின், நயன்தாராவுக்காக கோபி நயினார் உருவாக்கிய படம்தான் அறம். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நயன்தாராவுக்கும், கோபி நயினாருக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. ஆனால் கத்தி படத்தில் விஜய்க்கு பதில் அஜீத் நடித்திருந்தால், கோபி நயினார்தான் உண்மையான கதை எழுதியவர் என தெரிய வந்திருந்தால் அவரது பெயர்தான் படத்தில் வந்திருக்கும் என கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.