வெளி உலகத்திற்கு தன்மகளை முதன்முதலாக அறிமுகப்படுத்திய ‘கலக்கப்போவது யாரு’ நவீன்… வைரலாகும் புகைப்படம் உள்ளே…

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகர் நவீன். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது இவர் அந்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று  ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன்.  இவர் தற்பொழுது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல் திருமணமாகி விவாகரத்தான இவர் இரண்டாவது முறையாக  2018 இல் கிருஷ்ணகுமாரி என்ற மலேசியா பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது நடிகர் நவீன் குழந்தையின் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….