எவ்வளவு அழகான க்யூட் குட்டிஸ்… நடிகர் நகுலின் குழந்தைகளை பார்த்திருக்கீங்களா… வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க…

நடிகர் நகுல் தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவியுடன் விஜயதசமி கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழில் இயக்குனர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். . இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் தற்பொழுது வாஸ்கொடகாம ,எரியும் கண்ணாடி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ளனர். தற்பொழுது இவர் தனது குடும்பத்துடன் விஜயதசமியை கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….